Video
About Marunthuvazhmalai
இராவணனின் தம்பியாகிய விபீஷ்ணன், ராமனிடம் 'இந்தப் பிரம்மாஸ்திரம் தன்னைப் படைத்த பிரம்மனையும் அழிக்க வல்லது. சஞ்சீவி மலையில் சல்லிய கரணி, சந்தன கரணி, சஞ்சீவி கரணி, சமய கரணி என்னும் நான்கு மூலிகைகள் உள்ளன. இவைகளுள் ஒன்று காயத்தை மாற்றும், மற்றொன்று அறுபட்ட உறுப்பைப் பொறுத்தும், இன்னொன்று பெருமூச்சை அகற்றும், பிறிதொன்று உயிர் கொடுக்கும். இந்த நான்கு மூலிகைகளைக் கொண்டு வந்தால் மட்டுமே இவர்கள் உயிர் பிழைப்பர். ஆனால் அந்த மருந்து இருக்கும் இடத்தில் விஷ்ணுவின் சக்கரம் காவலுக்கு உள்ளது. இதுவரை அந்த மூலிகைகளை கண்டு பறித்து வந்தவர் யாரும் இல்லை. அவற்றைக் கொண்டு வர வாயுவின் மகனாகிய அனுமனே தகுதியானவர்' என்றார். இதைக்கேட்ட அனுமன் ராமனை வணங்கி, ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே சஞ்சீவி மலை நோக்கி விரைந்தார். போன வேகத்தில் மூலிகைகளின் பெயர் மறந்துவிட, அங்கிருந்த மலையை அப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு வந்தார்.
morePhoto Gallery
Marunthuvazhmalai History
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் (NH47) 9 கி.மீ தொலைவில் வளர்ந்தோங்கி பலவகையான மருந்துச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்துள்ள இம்மலை 'மருந்துவாழ்மலை' என்று அழைக்கப்படுகிறது.
மருந்துவாழ்மலையின் சிறப்பு : கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 அடி உயரமும், 625 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்டது இம்மலை. பல முனிவர்கள் தங்கி தவம் புரிந்த பெருமையினையுடையது. இந்துமாக்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமமாகும் கன்னியாகுமரிக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டி, நீண்டு நிமிர்ந்து நிற்கும் மலை மருந்துவாழ்மலையாகும். அகத்திய முனிவர், அத்திரி முனிவர், பரமார்த்தலிங்கேஸ்வரர், தேவேந்திரன் வரை புனிதத் தவம் மேற்கொண்ட பெருமையினை உடையதாகும். இன்றும் இங்கு பல சித்தர்கள் மலையின் குகைகளில் வசிப்பதை காணலாம்
Address
மருந்துவாழ்மலை ஆன்மிக அறக்கட்டளை
" சர்வ சந்தோஷம் " வைகுண்டபதி,
மருந்துவாழ்மலை கன்னியாகுமரி மாவட்டம்
Pincode - 629 703. தமிழ்நாடு - இந்தியா.
கைபேசி : +91 98402 09568 +91 9445304357